திருவாரூரில் மிக்ஸியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு; குழந்தைக்கு உணவு அரைத்தபோது விபரீதம்


திருவாரூர்: 8 மாத குழந்தைக்கு உணவு அரைத்தபோது மிக்ஸியில் மின்சாரம் தாக்கி தாய் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் அருகே பின்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சிந்து பைரவி. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த சூழலில், தனது 8 மாத குழந்தைக்கு இன்று காலை உணவு அரைத்து கொடுக்க முற்பட்டபோது, மிக்ஸியில் இருந்து மின்சாரம் தாக்கி சிந்து பைரவி. உடனடியாக கணவரும், அக்கம் பக்கத்தினரும் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர்கள் சோதித்து சிந்து பைரவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீஸார் வந்து, சிந்து பைரவியின் உடலை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x