மன்னிப்பு கேட்டார் பொன்முடி: தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தியதாக வருத்தம்!


சென்னை: நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்

நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

சைவம், வைணவன் குறித்த அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவரது துணை பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்து உத்தரவிட்டிருந்தார். ஆயினும் அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் பொன்முடி.

x