ஆளுநர்/ஜனாதிபதி கையெழுத்தின்றி நடைமுறைக்கு வந்த சட்டங்களால் புது வரலாறு - திமுக எம்.பி வில்சன் பெருமிதம்


சென்னை: எந்தவொரு சட்டமன்றத்திலும் முன்னோடியில்லாத வகையில், ஆளுநர் / குடியரசுத் தலைவர் அவர்களின் கையெழுத்து இன்றி, மாறாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முதன்முறையாக நடைமுறைக்கு வந்துள்ள சட்டங்கள் என்பதால் ஒரு புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது என திமுக வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு அளுநருக்கு எதிரான வழக்கில், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க, 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அவை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்தியாவின் எந்தவொரு சட்டமன்றத்திலும் முன்னோடியில்லாத வகையில், ஆளுநர் / குடியரசுத் தலைவர் அவர்களின் கையெழுத்து இன்றி, மாறாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் முதன்முறையாக நடைமுறைக்கு வந்துள்ள சட்டங்கள் என்பதால் ஒரு புது வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நமது பல்கலைக்கழகங்கள் இனி அப்பழுக்கற்ற வகையில் அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்

x