‘2026ல் தவெக வெற்றிபெறும்; திமுக, பாஜகவை மக்கள் தூக்கியெறிவார்கள்’ - விஜய் பரபரப்பு அறிக்கை


சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி விரட்டியடித்து தூக்கி எறியப்போவது உறுதி. அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்து சென்று உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப்போவதும் உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுகவின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான மறைமுக கூட்டு கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி விரட்டியடித்து தூக்கி எறியப்போவது உறுதி.

அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்து சென்று உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப்போவதும் உறுதி’ எனத் தெரிவித்துள்ளார்

x