சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 8,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 8,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்தது, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவற்றால் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. இதன் தாக்கத்தால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்கிறது" என்றார்.