சென்னை: திருச்சி நீதிமன்றத்தில் நாளை சீமான் ஆஜராக வேண்டும் என என மாவட்ட நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார் மீது சீமான் புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் மற்றும் நாதகவினர் வார்த்தைப்போர் முற்றியது. இதனையடுத்து தன்னைப்பற்றியும், தனது குடும்பம் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. வந்திதா பாண்டே இப்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்.07) மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் சீமான் தனியார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, நாளை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பாலஜி உத்தரவிட்டுள்ளார்