‘அந்த தியாகி யார்?’ - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்!


சென்னை: சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் அந்த தியாகி யார்? என்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ் அணிந்து வருகை தந்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் பின்னணியில் உள்ள 'அந்த தியாகி_யார்?' என்ற கேள்வியை பேட்ஜாக சட்டையில் அணிந்து வந்திருந்தனர். மேல் அந்த பேட்ஜில் டாஸ்மாக் ஊழல் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

ஏற்கெனவே கடந்த வாரம் திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் ஊழல் - பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ.1,000 கோடி, உரிமம் வராத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்கள் கேள்வி என்றும், 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி ,முக்கிய அந்த தியாகி யார்?’ என்றும் அதில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

x