பாஜக​வின் மிரட்​டலுக்கு பணி​யும் அதி​முக: இந்​திய கம்​யூ. மாநில செய​லா​ளர் விமர்​சனம்


சேலம்: பாஜக​வின் மிரட்​டலுக்கு அதி​முக பணிந்து செல்​லும் நிலை​யில் உள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாடு சேலத்​தில் ஆக. 15, 16, 17, 18-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளன. இதில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா மற்​றும் தேசிய தலை​வர்​கள், பொறுப்​பாளர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

மத்​திய அரசு பின்​பற்​றக்​கூடிய கொள்​கைகள், நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றக் கூடிய சட்​டங்​கள் போன்​றவை, நாடு ஆபத்தை நோக்​கிச் செல்​வதை உணர்த்​துகின்​றன. தேசிய கல்விக் கொள்கை என்​பது 90 சதவீத மாணவர்​களை வீட்​டுக்கு அனுப்​பும் திட்​ட​மாகும். இது வெறும் மொழிப் பிரச்​சினை, பணப் பிரச்​சினை அல்ல; கல்வியே இல்​லாமல் செய்​யும் முயற்​சி​யாகும்.

‘ஒரே நாடு ஒரே தேர்​தலின்’ நோக்​கம் ஒரே கட்​சி, ஒரே ஆட்சி என்​பது​தான். வக்பு வாரிய சட்​டம் முற்​றி​லும் முஸ்​லிம்​களுக்கு எதி​ராக நிறைவேற்​றப்​பட்ட திட்​ட​மாகும். இதை நிறைவேற்​றிய தினத்தை கருப்பு தின​மாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. பாஜக​வின் சூழ்ச்​சி​யைப் புரிந்து கொள்​ளாமல், சில கட்​சிகள் அவர்​களிடம் சிக்​கி​யுள்​ளன.

அதி​காரம், பண பலம், மிரட்​டலால் அனைத்​துக் கட்​சிகளை​யும் அழிக்க நினைக்​கிறது பாஜக. அதன் உத்​தர​வுக்கு அதி​முக கட்​டுப்​பட​வில்லை என்​றால், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் மாற்​றப்​படு​வார் என்று மிரட்​டும் சூழல் நில​வு​கிறது. பாஜக​வின் மிரட்​டலுக்கு அதி​முக பணிந்து செல்​லும் நிலை​யில் உள்​ளது.

இலங்​கைக்கு சென்ற பிரதமர் மோடி, கச்​சத்​தீவை மீண்​டும் தமிழகத்​திடம் ஒப்​படைப்​பது தொடர்​பாக அந்​நாட்டு அரசிடம் பேசி​னா​ரா, அதற்​கான உத்​தர​வாதத்தை பெற்​றாரா என்று தெரிய வேண்​டும். அதே​போல, எதிர்​காலத்​தில் படகு​கள் பறி​முதல், மீனவர்​கள் கைது இருக்​காது என்ற உத்​தர​வாதத்தை அவர் பெற்​றுத் தரு​வாரா என்​பதும் கேள்விக்​குறி​தான்​. இவ்​வாறு முத்​தரசன்​ கூறினார்.

x