டான்சேம் நிறுவனம் சார்பில் ஏப்.19-ல் வேலை வாய்ப்பு முகாம்


திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், ஓட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கான முகாமை டான்சேம் நிறுவனம் ஏப்.19-ம் தேதி நடத்துகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார் பில் நேர்காணல் நடத்தப்படும்.

டிரீம் இந்தியா தொழில்நுட்ப கல்லூரி. 5.அன்னை தெரசா சாலை, சின்ன ஈக்காடு. திருவள்ளுர் மாவட்டம் என்ற முகவரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். மேலும் ( goc.tansam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 70107 02097, 99400 26121, 86818 78889. 95148 38485 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

x