திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு, ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிநெறி முறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் பிரதாப் தலைமை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு கூடுதலாக நிழற்பந்தலுடன் தடுப்பு வரிசைகள் அமைத்து தருவது, பக்தர்கள் எளிதில் அறியும் வண்ணம் அறி விப்பு பலகைகளை ஆங்காங்கே வைப்பது, பக்தர்களுக்கு உடனுக் குடன் காவல்துறை மூலம் அறி விப்புகள் வழங்குவது, பொது முகவரி அமைப்பு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோயில் உள்புறம் நெய் தீப விளக்கு ஏற்றுவதை தவிர்த்து கோயில் நிர்வாகத்தால் கோயிலுக்கு வெளியே விளக்கு மண்டபத்தில் தீபம் ஏற்றவும், கோயில் உள்பகுதியில் பக்தர் கள் கொண்டுவரும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங் குவதை தவிர்த்து அதற்கென ஒதுக்கீடு செய்யப்படும் இடத் தில் வழங்கவும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அத்துடன், கோயிலுக்கு முன்பு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், உள்ளாட்சி துறை மற்றும் கோயில் நிர்வாகம் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் கோயில் நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பு கருதி கோயில் சந்நிதி இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என பக்தர் கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை மற்றும் விளம்பரம் செய்ய வேண்டும் என ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் எஸ்பிரா.சீனிவாச பெரு மாள், இந்து சமய அறநிலையத் துறை வேலூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன்,
பொன் னேரி கோட்டாட்சியர் கனிமொழி, கோட்டபொறியாளர் (நெடுஞ் சாலைத் துறை) சிற்றரசு, உதவி இயக்குநர் ஊராட்சிகள் யுவராஜ். திருவள்ளுர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரியா ராஜ். இந்து சமய அறநிலையத் துறை திருவள்ளூர் உதவி ஆணைய மு.சிவஞானம், டிஎஸ்பி சாந்தி, பொன்னேரி வட்டாட்சியர் டி.ஆர். சோம சுந்தரம், கோயில் செயல் அலுவலர் மா.மாதவன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.