ஓடைகளில் வெள்ள பெருக்கு: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை


வத்திராயிருப்பு: சதுரகிரியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்களை தினசரி அனுமதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டது. இந் நிலையில், கன மழையால் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நேற்று மலையேற தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வந்தனர். இந் நிலையில், தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் இந்நடைமுறை அமல்படுத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக வனப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக, சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி பக்தர்கள் நேற்று மலையேற அனுமதிக்கப்படவில்லை.

x