பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை: பாளை. சித்த மருத்துவக் கல்லூரி விளக்கம்


திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக, மாணவிகள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், புகாரில் உண்மை எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும் கல்லூரி முதல்வர் டி. கோமளவல்லி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது: அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்து குழு விசாரணை நடத்தியுள்ளது. கல்லூரியில் இறுதியாண்டில் 2 பிரிவாக 180 மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, எந்த மாணவியும் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை என்று குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவிகள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படும் புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x