'வெள்ளியங்கிரி மலையில் மரக்கன்றுகள் நடக்கூடாது’ - பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை


கோவை: வெள்ளியங்கிரி மலையில் அனுமதியின்றி மரக்கன்றுகள் நடவு செய்தல், மரங்களை சேதப் படுத்துதல்,கொடியேற்றுதல் போன்ற செயல்களை செய்யக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கோவை பூண்டி வெள்ளியங் கிரி மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் சில பக்தர்கள் கட்சிக் கொடியை மலையில் நட்டும், மரக் கன்றுகளை நடவு செய்தும் வீடி யோக்களை சமூக வலைதளங் களில்பரப்பிவருகின்றனர். மேலும் 6-வது மலையில் குளிக்கும் பக்தர்கள் அங்கேயே ஈர துணிகளை விட்டு செல்வதால் மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை வனக் கோட்ட அலுவலர் ஜெயராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை வனக்கோட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வனத்துறையால் அனுமதிக்கப் பட்ட பாதைகளில் மட்டும்பக்தர்கள் செல்ல வேண்டும். மாற்று பாதை களில் செல்ல வேண்டாம். பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல் வதை தவிர்க்கவும். பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போட வேண்டாம். மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது. வனப்பகு திக்குள் எங்கும் தீ மூட்டக்கூடாது.

அனுமதியின்றி வனப்பகுதிக் குள் மரக்கன்றுகள் நடவு செய்தல், மரங்களை சேதப்படுத்துதல், கொடியேற்றுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. வெள்ளியங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்து விட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட செயல்கள் தமிழ்நாடு வனச்சட்டம் 1882-ன் படி குற்றமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x