சென்னை: சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாமல் இதுபோல கருத்துக்களை சொல்கிறார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்பின் வாயிலாக யாரையாவது திருப்தி படுத்த பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “சைதை துரைசாமியை எதிர்ப்பவர்கள் உடல், பொருள், உழைப்பு, ஆவி அனைத்தையும் அதிமுகவுக்காக அர்ப்பணித்தவர்கள். சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாமல் இதுபோல கருத்துக்களை சொல்கிறார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்பின் வாயிலாக யாரையாவது திருப்தி படுத்த இதுபோல பேசுகிறார். அவர் அதிமுகவில் எத்தகைய தொடர்பும் இல்லாத நபர்.
செங்கோட்டையன் கழகத்தின் மூத்த முன்னோடி. அவர் அவருடைய கடமையை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். அதனை சைதை துரைசாமி போன்றோர் ஊதி பெருதாக்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்