புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு


சென்னை: புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அண்ணமலை, “புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அதேபோல பாஜக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும் கைகாட்டவில்லை. அண்ணாமலை டெல்லி சென்றார், அவரை கைகாட்டினார், இவரை கைகாட்டினார். கட்சி எப்போது நன்றாக இருக்கவேண்டும். பலபேர் உயிரை கொடுத்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளனர். பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடுவதில்லை. எல்லோரும் இணைந்துதான் தலைவரை தேர்ந்தெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜக தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையொட்டியே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் தலைவராக தொடரமாட்டார் என தகவல்கள் வெளியாயின. புதிய பாஜக தலைவருக்கான ரேஸில் இப்போது நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளதாக சொல்லப்படுகிறது.

x