‘முட்டை எங்கே?’ எனக் கேட்ட மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் - திருவண்ணாமலை அதிர்ச்சி வீடியோ


சென்னை: திருவண்ணாமலை போளூர் அரசு பள்ளியில் முட்டை எங்கே என கேட்ட மாணவரை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் சத்துணவு சாப்பிடும் போது முட்டை எங்கே என சத்துணவு ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் அந்த மாணவரை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் ஒரு மாணவரை இரண்டு சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் சரமாரியாக தாக்கும் காடிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுகவின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திருவண்ணாமலையில் "முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் முட்டை இல்லை என்றீர்கள்" என கேட்ட அரசு துவக்கப்பள்ளி மாணவனை துடைப்பக் கட்டையால் அடிக்கும் சத்துணவு ஊழியர்.

இது தான் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ்?

படிக்க செல்லும் பிள்ளைகளை இந்த ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் விதம் இது தானா?’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x