காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 1,299 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கலாம் - வெளியானது அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலுகாவில் காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கு 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வை எழுத ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 20 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வு உண்டு. அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வரும் 7ம் தேதி முதல் மே 3 ஆம் தேதிக்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

x