சந்திரனில் பிளாட்டினம் இருக்கிறதா? - இஸ்ரோ முன்னாள் தலைவர் விளக்கம்


திருச்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய விண்வெளி மையத்தில் இருந்து நிலவுக்கு மனிதனை 2040-ம் ஆண்டு அனுப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோவில் மட்டுமல்ல தனியார் ஆராய்ச்சி மையங்களிலும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

விண்வெளியில் இருந்து புவிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்சை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைத்துள்ளார். நாங்களும் அவருக்கு எக்ஸ் தளம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

‘சந்திரனில் பிளாட்டினம் இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது. உண்மையிலேயே இருக்கிறதா ?’ என்ற கேள்விக்கு, ‘‘இதற்காக அஸ்ட்ரோ மைனிங் என்ற புரோகிராம் இருக்கிறது. அதற்காக பல நாடுகள் வேலை பார்த்து வருகின்றன. நாமும் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். ஆனால், அங்கு பிளாட்டினம் இல்லை. அதையும் தாண்டி நிறைய இருக்கிறது. அதனை ஆராய்ச்சி செய்வதற்காக நாம் தொடர்ந்து வேலை பார்த்து வருகிறோம்’’ என்றார்.

x