மேட்டூர் அணை பூங்கா முன்பு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்; நோய் தொற்று அபாயத்தில் மக்கள்


மேட்டூர் அணை பூங்கா முன்பு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள். 

சேலம்: மேட்டூர் அணை பூங்கா முன்பு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். அணையின் வலது கரை செல்லும் கைகாட்டி பகுதியில் மீன், கோழி இறைச்சிகள் மூட்டைகளில் குவியல்குவியலாகக் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சாலை செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள பூங்கா முன்பு மருத்துவக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. இதில் மருத்துவமணையில் நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசி, காயத்துக்கு கட்டுப்போட்ட கழிவுகள், முகக்கவசம், காலாவதியான டானிக்குகள், மாத்திரைகள், மருந்து டப்பாக்கள் ஆகியவை காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் பூங்காவிற்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோடை விடுமுறையையொட்டி, அணை பூங்காவை பார்வையிட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அணைப் பூங்கா முன்பு மருத்துவப் பதிவுகளை மர்மமானவர்கள் கொட்டிச் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஊசி, உடைந்த மருந்து பாட்டில்கலால் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற சம்பவமும் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதிகளில் சுற்றித் தெரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மருத்துவக் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன. ஆபத்தான முறையில் உள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தி, கழிவுகளை கொட்டிச் செல்லும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றனர்.

x