பண்ருட்டி பலா, செட்டிக்குளம் சின்னவெங்காயம் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; தமிழகம் சாதனை


சென்னை: தமிழகத்தில் செட்டிக்குளம் சின்னவெங்காயம், பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள செட்டிக்குளம் சின்னவெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, ராமநாதபுரம் சம்பா கார் அரிசி, விருதுநகர் சம்பா வத்தல் உள்ளிட்ட பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதன் மூலம் அதிகளவில் புவிசார் குறியீடு பெற்ற 2வது மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.

முன்னதாக சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதேபோல மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கும் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது

ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்குகிறது.. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களை தனித்துவமாக விற்பனை செய்ய சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது..

x