அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்... நிர்மலா சீதாராமனை சந்தித்தார் தம்பிதுரை!


புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் பாஜக தலைவர்களை சந்தித்த நிலையில் இப்போது தம்பிதுரையும் சந்திப்பு நடத்தியுள்ளார்

கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்காக இந்த சந்திப்புகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய தம்பிதுரை, “தமிழகம்- கர்நாடக எல்லையில் ஜுஜுவாடி பகுதியில் வணிகவரித் துறையினர் வாகனங்களை சோதனையிடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அதுவும் அவை மண்டபத்தில்தான் சந்தித்தேன். மத்திய அமைச்சர் பதவிக்காக அவரை சந்திக்கவில்லை” என்று அவர் கூறினார். அதேபோல, நேற்று சி.வி. சண்முகம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மீண்டும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

x