கடலூரில் என்கவுன்டர்: பிரபல ரவுடி விஜய் சுட்டுக்கொலை; போலீஸார் அதிரடி


சென்னை: கடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விஜய் என்பவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த செய்த சம்பவத்தில் தொடர்புடையவர் முட்டை விஜய்(19). புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடியான இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முட்டை விஜயை போலீஸார் வலைவீசி தேடிவந்தனர்.

கடலூரில் எம்.புதூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர் அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதனையடுத்து விஜயை சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

x