கடலூர் மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு


ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 25 வட்டாட்சியர்கள் மாவட்டத்திற்குள்ளேயே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு: கடலூர் டாஸ்மாக் டெப்போ மேலாளர் மகேஷ் கடலூர் வட்டாட்சியரகவும், பண்ருட்டி தனி வட்டாட்சியர் பிரகாஷ் பண்ருட்டி வட்டாட்சியராகவும், சிதம்பரம் தனி வட்டாட்சியர் பிரகாஷ் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளர் கீதா சிதம்பரம் வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் தனி வட்டாட்சியர் சித்ரா புவனகிரி புவனகிரி வட்டாட்சியராகவும், கடலூர் முத்திரைத்தாள் பிரிவு தனி வட்டாட்சியர் இளஞ்சூரியன் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியர் அரவிந்தன் விருத்தாசலம் வட்டாட்சியராகவும், விருத்தாசலம் வட்டாட்சியர் உதயகுமார் திட்டக்குடி வட்டாட்சியராகவும், ஆலய நிலங்கள் பிரிவு வட்டாட்சியர் செந்தில்வேல் வேப்பூர் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்த பலராமன் மாவட்ட ஆட்சியர் இசைவு தீர்ப்பாயம் தனி வட்டாட்சியராகவும், பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்த் ஆலய நிலங்கள் பிரிவு தனி வட்டாட்சியராகவும், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புவனகிரி வட்டாட்சியர் தனபதி என்எல்சி தொடர்பு அலுவலராகவும், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் சேகர் பண்ருட்டி தனி வட்டாட்சியராகவும், திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் விருத்தாசலம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக வும், கடலூர் டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலர் ஜான்சிராணி தேசிய நெடுஞ்சாலைகள் அலகு (3) தனி வட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வட்டாட்சியர் அருள் சத்யா மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக (பறக்கும் படை) தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ஹரிதாஸ் சிதம்பரம் தனி வட்டாட்சியராகவும், விருத்தாசலம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி விருத்தாசலம் தனி வட்டாட்சியராகவும், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிவக் குமார் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும், இசைவு தீர்ப்பாயம் தனி வட்டாட்சியர் ஆனந்தி முத்திரைத் தாள் பிரிவு தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெய்வேலி தனி வட்டாட்சியர் செல்வகுமார் கோட்ட கலால் அலுவலகத்திற்கும், கோட்ட கலால் அலுவலர் ஜெயசெல்வி டாஸ்மாக் ஐஎம் எஃப்எல் பிரிவு மேலாளராகவும், விருத்தாசலம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் திட்டக்குடி தனி வட்டாட்சியராகவும், திட்டக்குடி தனி வட்டாட்சியர் கார்த்திக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

x