சென்னை: நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா என நித்தியானந்தா எச்சரித்துள்ளார்
இதுகுறித்து நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘இன்னமும் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். என் மீது அவதூறு பரப்புபவர்களை நான் எதுவும் செய்யப்போவது இல்லை. மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க.. இதுக்கு மேல தொடர்ந்து வம்பு செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க” என அதில் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவில், “ நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 வீடியோக்களை எப்ப நான் பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன். நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு எனக்கும் சந்தேகமாக இருக்கு. எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா” எனத் தெரிவித்துள்ளார்
இந்த தளத்தில் வெளியாகியுள்ள மற்றொரு பதிவில், ‘பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது.
இனிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார் என்று அறிவிக்கப்படுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களாக நித்தியானந்தா இறந்துவிட்டார் என்ற செய்திகள் இணையதளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை உருவாக்கின. இதனையடுத்து இந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.