கோவை கீரணத்தம் ஊராட்சியில் சூப்பர் முயற்சி: 1 கிலோ பிளாஸ்டிக் கொண்டுவந்தால் ரூ.10 சன்மானம்!


கோவை: கீரணத்தம் ஊராட்சி சார்பில் 1 கிலோ பிளாஸ்டிக் கொண்டு வரும் நபர்களுக்கு ரூ.10 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, கீரணத்தம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கீரணத்தம் ஊராட்சியின் தூய்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்றுவதன் முன்னோட்டமாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்படுகின்றன.

சுகாதார பங்கெடுப்பு நோக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வரும் நபர்களுக்கு 1 கிலோவுக்கு ரூ.10 சன்மானம் வழங்கப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x