முல்லை பெரி​யாறு அணை குறித்த ‘எம்​பு​ரான்’ திரைப்பட காட்​சிகளை நீக்க வேண்​டும்: வைகோ, சீமான் வலி​யுறுத்​தல்


சென்னை: முல்​லைப் பெரி​யாறு அணையை பாது​காப்​பற்​ற​தாக சித்​தரிக்​கும் காட்​சிகளை ‘எம்​பு​ரான்’ திரைப்​படத்​தில் இருந்து நீக்க வேண்​டும் என வைகோ, சீமான் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ: நடிகர் மோகன்​லால் நடிப்​பில் உரு​வான ‘எம்​பு​ரான்’ திரைப்​படத்​தில் நெடும்​பள்ளி என்​கிற இடத்​தில் அணை இருப்​ப​தாக​வும், அந்த அணை கேரளாவை காவு வாங்க காத்​திருப்​ப​தாக​வும் வசனம் இடம்​பெற்​றுள்​ளது. முல்​லைப் பெரி​யாறு அணை​யால் கேரள மக்​களுக்கு ஆபத்து என்​பது​போல் திட்​ட​மிட்டு வசனங்​கள் திணிக்​கப்​பட்​டிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது.

முல்​லைப் பெரி​யாறு அணை​யின் பாது​காப்பை உச்ச நீதி​மன்​றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்​து, அணை​யின் நீர்​மட்​டத்தை 152 அடி உயர்த்​தி​னாலும் எந்த பாதிப்​பும் வராது என்று உறுதி செய்​திருக்​கிறது. ஆனால் முல்​லைப் பெரி​யாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்​ட​மிட்டு கேரளா​வில் திரைப்​படங்​கள் மூலம் அம்​மாநில மக்​களை பீதி​யில் ஆழ்த்த சில சக்​தி​கள் முயற்சி செய்து வரு​கின்​றன. எனவே இத்​ திரைப்​படத்​தில் முல்லை பெரி​யாறு அணை பற்​றிய காட்​சிகளை​யும் வசனங்​களை​யும் உடனடி​யாக நீக்க வேண்​டும். தமிழகத்​தில் ‘எம்​பு​ரான்’ திரைப்​படத்தை தடை செய்ய வேண்​டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: ‘எம்​பு​ரான்’ திரைப்​படத்​தில் முல்​லை ​பெரி​யாறு அணை​யைப் பாது​காப்​பற்​றது போல சித்தரிப்​பது வன்​மை​யான கண்​டனத்​துக்​குரியது. திரைப்​படத்​தில் அடிப்​படை ஆதா​ரமற்ற பொய் பரப்​புரை காட்​சிகளை அமைத்து கேரள மக்​களிடையே தேவையற்ற பயத்​தை​யும், பீதி​யை​யும் ஏற்​படுத்​து​வது மிகுந்த மன வருத்​தத்தை அளிக்​கிறது.

இது இரு மாநில மக்​களிடையே கலவரத்தை ஏற்​படுத்த முனை​யும் திட்​ட​மிட்ட சதி​யாகும். எனவே ‘எம்​பு​ரான்’ திரைப்​படக்​குழு உடனடி​யாக முல்​லை பெரி​யாறு அணை பாது​காப்​பற்​ற​தாக சித்​தரிக்​கும் காட்​சிகளை நீக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

x