திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மற்றும் இருகூர் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி- ஈரோடு ரயில் (56809) ஏப்.3, 5, 8, 11 ஆகிய தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) ஏப்.4, 6, 12, 14, 18 ஆகிய தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து சூலூர் வரை இயக்கப்படும். பின்னர், அங்கிருந்து பாலக்காடு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக அதே நிறுத்தங்களுடன் இயக்கப்படும்.