சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று (ஏப்.1) முதல், இம்மாதம் 30-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில், வரும் மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த பணியிடங்கள் விவரம்: துணை ஆட்சியர்: 28, துணை காவல் கண்காணிப்பாளர்: 07, உதவி ஆணையர்: 19, உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி: 07, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்: 03, உதவி ஆணையர்: 06 என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20I%20notification_Tamil_.pdf