‘விஜயின் சவால் கால் தூசுக்கு சமம்’ - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து


சிவகங்கை: அரசியலில் கைக்குழந்தையான நடிகர் விஜய் விடும் சவாலை கால் தூசாக கருதி தூக்கி எறிந்துவிட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திமுக சார்பில் நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுக 75 ஆண்டு காலத்தில் அனைத்து தலைவர்களையும் சந்தித்து வளர்ந்த கட்சி. ஆனால் 17 மாதங்களுக்கு முன் கட்சி தொடங்கிய ஒரு கைக் குழந்தை (விஜய்) திமுவை பார்த்து சவால் விடுகிறது. அதை கால் தூசாக நினைத்து தூக்கி எறிந்துவிட்டு போக வேண்டும்.

யார் கட்சி ஆரம்பித்தாலும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் சிலர் செல்கின்றனர். அவர்களின் ஆசை எல்லாம் நிராசையாகத்தான் போகும். யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு கவலையே இல்லை. திமுகவை எதிர்த்து பேசியவர்கள் எல்லாம் திமுவை நாடித்தான் வந்துள்ளனர். திமுக யாரையும் தேடி போகவில்லை. செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. திமுக நிர்வாகிகள் கவனமாக பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

x