ராமநாதபுரம் சரக புதிய டிஐஜியாக பி.மூர்த்தி பொறுப்பேற்றார்.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக இருந்த அபிநவ் குமார் மதுரை சரக டி.ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி-யாக இருந்த பி.மூர்த்தி ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட டிஐஜி பி.மூர்த்தி நேற்று ராமநாதபுரம் சரக டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து எஸ்.பி மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் டிஐஜி ஆலோசனை நடத்தினார்.