நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலை 5 பைசா உயர்ந்து ரூ.4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் முக்கிய நகரங்களில் முட்டை விலை விவரம்: சென்னை ரூ.5.20, பர்வாலா ரூ.3.95, பெங்களூரு ரூ.5.05, டெல்லி ரூ.4.10, ஹைதராபாத் ரூ.4.50, மும்பை ரூ.5.10, மைசூரு ரூ.5.05, விஜயவாடா ரூ.4.70, ஹொஸ்பேட் ரூ.4.55, கொல்கத்தா ரூ.5.25.