அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?


சென்னை: தமிழகத்தில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களி​லும் மித​மான மழை பெய்​யக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் வரும் ஏப்ரல் 2, 3, 4-ம் தேதி​களில் சில இடங்​களி​லும், 5-ம் தேதி ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

ஏப். 2-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், தென்​காசி, விருதுநகர், தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்டங்களி​லும், 3-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், நீல​கிரி மற்​றும் ஈரோடு மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

x