மதுரையில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள்; விண்ணப்பிப்பது எப்படி?


மதுரை: மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடை காலத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள், பொது மக்களுக்கு எம்ஜிஆர் விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

சிறுவர், சிறுமியர், ஆண், பெண் ஆகியோருக்கு நீச்சல் கற்பிக்கப்படும். சிறுவர், சிறுமியர் 8 வயதுக்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் 13ம் தேதி வரை, ஏப்.15 முதல் 27 வரை, ஏப். 29 முதல் மே 11 வரை, மே 13 முதல் மே 25 வரை, மே 27 முதல் ஜூன் 8 வரை பயிற்சிகள் நடைபெறும்.

காலை 7.30 மணி முதல் 8.30 வரை, காலை 8.30 முதல் காலை 9.30 வரை, காலை 11 முதல் 12 மணி வரை (பெண்கள் மட்டும்), மாலை 3.30 முதல் 4.30 வரை, மாலை 4.30 முதல் 5.30 வரை பயிற்சி நடைபெறும். மட்டும். பயிற்சி கட்டணம். ரூ.1,770. சேர விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

x