கரூர் அதிமுகவில் இணைந்த அமமுகவின் முக்கிய நிர்வாகிகள்; எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்பு


கரூர்: அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அமமுக கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய அவைத் தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர்.

அவர்களுக்கு அதிமுக கரை துண்டு அணிவித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரவேற்றார். இதில், அதிமுக கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் இளங்குமரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x