“யார், யாருடன் சேர்ந்தாலும் திமுகவுக்கு கவலை இல்லை!” - துரைமுருகன்


படம்: வி.எம்.மணிநாதன்

யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் திமுகவுக்கு கவலை இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தில் தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.4,043 கோடி நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றஞ்சாட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நடிகர் விஜய் திமுகவுக்கும், அவரது கட்சிக்கும்தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. இதேபோல், யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது குறித்தும் திமுகவுக்கு கவலை இல்லை. திமுகவினர் உழைப்போம், வெற்றி பெறுவோம். காட்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்’’ என்றார்.

x