சென்னை ஆசிரியர் காலனியில் இருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்


சென்னை: ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்தில் இருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24ஏ எக்ஸ் என்ற வழித்தடத்தில், ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்திலிருந்து விநாயகபுரம், ரெட்டேரி, அண்ணா நகர் மேற்கு, 18-வது மெயின் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, பீட்டர்ஸ் ரோடு வழியாக விவேகானந்தர் இல்லம் வரை சாதாரண கட்டண பேருந்து இயக்கப்படும்.

இதேபோல், 113 ஏ என்ற வழித்தடத்தில் ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்திலிருந்து விநாயகபுரம், ரெட்டேரி, திருமங்கலம், கோயம்பேடு பேருந்து நிலையம், அசோக் பில்லர் வழியாக கிண்டி தொழிற்பேட்டை வரை சாதாரண கட்டண பேருந்து இயக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கும் இப்பேருந்துகளை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.சுதர்சனம் இன்று தொடங்கி வைத்தார்.

மேற்கூறிய 2 வழித்தடத்திலும் தலா ஒரு பேருந்து இயக்கப்படும் நிலையில், விநாயகபுரம், ரெட்டேரி, கொளத்தூர், ஜிகேஎம் காலனியை இணைக்கும் வகையில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உரிய அலுவலரிடம் தெரியப்படுத்தியிருப்பதாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

x