சேலம்: ஈரோடு- செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலானது, வரும் 31-ம் தேதி ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு ரயில் நிலையத்தை அடுத்துள்ள பாசூர் ரயில்வே யார்டில் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. எனவே, ஈரோடு- செங்கோட்டை (எண்.16845) விரைவு ரயில் வரும் 31-ம் தேதி ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படாது. மாறாக, கரூரில் இருந்து மாலை 3.05 மணிக்குப் புறப்பட்டு, செங்கோட்டையை சென்றடையும்.
இதேபோல், செங்கோட்டை- கரூர் (எண்.16846) ரயிலானது, வரும் 31-ம் தேதி செங்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு கரூரை வந்தடையும். இந்த ரயிலானது, கரூர்- ஈரோடு இடையே இயக்கப்படாது.
இதேபோல், திருச்சி- ஈரோடு (எண். 56809) பயணிகள் ரயிலானது, வரும் 31-ம் தேதி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்பட்டு கரூர் வந்தடையும். இந்த ரயிலானது, கரூர்- ஈரோடு இடையே இயக்கப்படாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.