சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 24-ம் தேதி இரவு பணி முடிந்து விடுதிக்கு நடந்து சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் பின்னால் வந்த இளைஞர் அத்துமீறியதோடு, முகத்தை துணியால் மூடி தாக்கினார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து கடந்த 3 நாட்களாக பணியை புறக்கணித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும் விடுதிக்குச் செல்லும் வழியில் இருபுறமும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறியதால் பயிற்சி மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து பணிக்குச் சென்றனர்.