சென்னை: தாட்கோ தலைவராக நா.இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்காக 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி யால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தொடங்கப்பட்டது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவில், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும், மேம்பாட்டு பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நா.இளையராஜாவை நியமித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை உத்தவிட்டுள்ளது. இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள ஆலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திமுகவில் மாநில இளைஞ ரணி துணைச் செயலாளராக உள்ளார்.