தமிழக மீனவர்கள் 7 பேர் தாயகம் திரும்பினர்


இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் தாயகம் திரும்பினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 2 விசைப்படகுளை தனித்தனியாக சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

கடந்த வாரம் மன்னார் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு தலா இலங்கை பணம் ரூ. 2 லட்சத்து 50 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

7 மீனவர்கள் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை மாலை சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 7 பேரும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்து செல்லப்பட்டனர்.

x