புதுடெல்லி: திருச்சி- டெல்லி நேரடி விமான சேவை விரைவில் தொடங்கக் கோரி மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் எம்.பி துரை வைகோ மனு அளித்தார்.
இது குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி - டெல்லி நேரடி விமான சேவை தொடங்கக் கோரி மத்திய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று சந்தித்து மனு அளித்தேன். இந்த சேவை தொடங்கப்பட்டால், திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 11 மத்திய மாவட்டங்களும் பயனடையும் என எடுத்துரைத்தேன்.
அப்போது, டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலைய முக்கிய அதிகாரிகளை செல்போனில் அழைத்துப் பேசி, இந்த கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். எனவே, திருச்சி - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.