பெரம்பலூர்: பட்டியலின மாணவிகள் புகாரையடுத்து வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 6 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் கணிணி அறிவியல் துறை, தமிழ்த் துறை மாணவிகள் சிலர், தங்களை கல்லூரி விரிவுரையாளர்கள் சிலர் தரக்குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கல்லூரி முதல்வரிடம் அண்மையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் தமிழ் துறையைச் சேர்ந்த சு.நன் முல்லை, ப.செந்தமிழ்ச் செல்வி, மோ.பிரபா, ஆர்.மலர் விழி, கே.ஹேம மாலினி மற்றும் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த எஸ்.ஜே. சங்கீதா ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து அக்கல்லூரி முதல்வர் மணி மேகலை நேற்று உத்தரவிட்டுள்ளார்.