இந்​துக்​களின் சொத்​துகளை வக்பு வாரி​யம் அபகரிக்க துணை போவதா? - திமுக​வுக்கு இந்து முன்​னணி கண்​டனம்


சென்னை: இந்​துக்​களின் சொத்​துகளை வக்பு வாரி​யம் சட்​ட​விரோத​மாக அபகரிக்க திமுக உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகள் துணை போகின்றன என இந்து முன்​னணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசு, வக்பு வாரி​யம் திருத்த சட்​டம் குறித்து மக்​களின் கருத்​தைக் கேட்டு ஒரு மசோ​தாவை நாடாளு​மன்​றத்​தில் கொண்டு வந்​தது. இதனை காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் எதிர்த்​த​தால் மத்​திய அரசு நாடாளு​மன்ற கூட்​டுக்​குழுவை ஏற்​படுத்​தி​யது. நாடாளு​மன்ற கூட்​டுக்​குழு நடப்பு நாடாளு​மன்ற கூட்​டத்​தில் அந்த மசோ​தாவை தாக்​கல் செய்ய உள்​ளது.

சட்டப்பேரவையில் தீர்மானம்

இந்​நிலை​யில், வக்பு வாரிய திருத்த மசோ​தாவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து தமிழக சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​படு​கிறது. திருச்​சி, திருப்​பூர், ஈரோடு, திண்​டுக்​கல், திருநெல்​வேலி, ராணிப்​பேட்​டை, சென்னை என பல பகு​தி​களில் இந்​துக்​களின் சொத்​துகளை வக்பு வாரிய சொத்து என்று எந்த ஆதா​ர​மும் ஆவண​மும் இல்​லாமல் உரிமை கொண்​டாடியது வக்பு வாரி​யம்.

தங்​கள் சொத்​துகளை வக்பு வாரி​யம் சட்​ட​விரோத​மாக அபகரிக்க திமுக உள்பட அரசி​யல் கட்​சிகள் துணை​போகின்றன என்​பதை தமிழக மக்​கள் புரிந்து கொள்ள வேண்​டும். இதனை இந்து முன்​னணி வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

x