செ​யின் பறிப்பு குற்​ற​வாளி என்​க​வுன்ட்​டர்: காவல்​துறைக்கு பிரேமலதா பாராட்டு


சென்னை: செயின் பறிப்பு குற்​ற​வாளியை என்​க​வுன்ட்​டர் செய்த காவல்​துறைக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னை​யில் ஏழு இடங்​களில் நடை​பெற்ற செயின் பறிப்பு சம்​பவம், கொள்​ளை​யில் ஈடு​பட்ட இரானி கொள்​ளை​யர்​களை சிறிது நேரத்​தில் கைது செய்து என்​க​வுன்ட்​டர் செய்​தது பாராட்​டுக்​குரிய ஒன்​றாகும். காவல் ஆணை​யர் ஏ.அருண், உடனடி​யாக துரித நடவடிக்கை எடுத்து கொள்​ளை​யர்​களை கைது செய்​தது மிக​வும் பாராட்​டுக்​குரியது.

இனிவரும் காலங்​களில் இது​போன்ற நிகழ்​வு​கள் நடக்​காமல் இருப்​ப​தற்கு இந்த முயற்சி உண்​மை​யிலேயே வரவேற்​கத்​தக்​கது. அதே​போல், தமிழகம் முழு​வதும் அனைத்​து​வித சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை​யும் கட்​டுக்​குள் கொண்டு வந்​து, மிகச் சிறந்த முறை​யில் காவல்​துறை பணி​யாற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x