கடலூர் புதிய பேருந்து நிலையத்தை எஸ்.புதூருக்கு மாற்றுவதைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்


கடலூர்: கடலூரில் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எஸ். புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொது நல அமைப்பு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூரில் மாநகர புதிய பேருந்து நிலையத்தை எஸ். புதூருக்கு மாற்றும் முயற்சியை கைவிட கோரியும்,புதிய பேருந்து நிலையம் கடலூர் மைய பகுதியில் அமைத்திட வலியுறுத்தியும்,188 ஏக்கர் கொண்ட கொண்டங்கி ஏரி அருகே பேருந்து நிலையம் அமைந்தால் சுற்றுச்சூழல் மாசுப்படும் என்றும், ஏரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் அருகில் எதுவும் அமைக்ககூடாது என்ற பசுமை தீர்ப்பாய விதியை மீறக் கூடாது.

காசநோய் மருத்துவமனை பாதிக்கப்படுவதை தடுத்திடவும் ,கடலூர் மஞ்சக்குப்பம் முதல் வெள்ளப்பாக்கம் வரை தென்பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்த தடுப்பு சுவர் அமைத்து விட நிதி ஒதுக்கிடு செய்ய வலியுறுத்தியும் இன்று காலை 11.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சிமாநில அமைப்பாளர் திரு மார்பன், காங்கிரஸ் கட்சி ஓவியர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் தண்டபாணி, குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடேசன், சிறப்பு தலைவர் மருதவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெங்கட்ராமன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு இஸ்லாமிய கூட்டமைப்பு நகர செயலாளர் நசிருதீன்,திராவிடர் கழக மாவட்ட செயலாளர் எழிலேந்தி, பொதுநல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி, மனித நேய ஐனநாயக கட்சி மன்சூர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

x