சமயபுரம் கோயில் உண்டியல்களில் ரூ.1.11 கோடி ரொக்கம்; 1.609 கிலோ தங்கம் காணிக்கை!


சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.1.11 கோடி ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில், ரூ.1,11,74,320 ரொக்கம், 1.609 கிலோ தங்கம், 3.752 கிலோ வெள்ளி, 115 வெளிநாட்டு கரன்சிகள், 1,100 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் அ. இரா.பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

x