தூத்துக்குடி: எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரண்மனை மேலவாசல், கோட்டை மேல தெரு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக 10-க்கும் மேற்பட்டோர் மத மாற்றம் தொடர்பாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்வதாக, இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி, எட்டயபுரம் தபால் நிலையம் அருகே துண்டு பிரசுரங்களுடன் வந்து கொண்டிருந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 10 பேரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.