தூத்துக்குடி: ஓபிஎஸ்சை கட்சியில் இணைப்பது சாத்தியமே இல்லை. பிரிந்தது பிரிந்தது தான். கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் உடன் இணைவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஓபிஎஸ்சை கட்சியில் இணைப்பது சாத்தியமே இல்லை. பிரிந்தது பிரிந்தது தான். கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
அதிமுகவினரின் கோயிலாக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். எனவே அவரை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் எங்களிடம் இருந்து விலகிய பலரும் இப்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்” என்று கூறினார்.