பல்லடம் அருகே டயாப்பர் தொழிற்சாலைக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்; சாலைமறியலால் பரபரப்பு


திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் தொழிற்சாலைக்கு எதிராக இன்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவரும், ஏர்முனை இளைஞரணி தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் அருகே வே.வாவிபாளையத்தில் விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனம் டயாப்பர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராம சபை தீர்மானத்தின் மூலமாகவும், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாகவும் ஊராட்சி நிர்வாகம் பணிகளை நிறுத்தியது. தற்போது ஊராட்சி தனி அலுவலர் மூலமாக அனுமதி வாங்கி கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்

இந்த தொழிற்சாலையில் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் மாசுபடும். டயாப்பர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (மார்ச் 26) தொழிற்சாலை அருகே தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் திடீரென சாலையில் தார்ப்பாய்களை விரித்து அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x