பூந்தமல்லியில் அதிர்ச்சி: குளிர் சாதன பெட்டிகள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து


பூந்தமல்லி: பூந்தமல்லியில் குளிர்சாதன பெட்டிகள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் குளிர்சாதனப் பெட்டிகள் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை சேமிப்புக் கிடங்கு பூட்டியிருந்த நிலையில், கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. அத்தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி, கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குளிர் சாதன பெட்டிகள் சில வெடித்து சிதறி வருகின்றன.

சேமிப்பு கிடங்கில் இருந்து அதிகளவிலான புகை வானை முட்டும் அளவுக்கு வெளியேறி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்டவைக்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துக்குறித்து தகவலறிந்த பூந்தமல்லி, மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

x